Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல் !

Advertiesment
Actor Ajith mourns Puneeth Rajkumar's
, வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:11 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி அஜித் இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இன்று நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

அவரது மறைவு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,புனித் ராஜ்குமார் மறைவுக்கு தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, கமல்ஹாசன், நாசர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ,  சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், புனித் ராஜ்குமாரின் மரணச் செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.  அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இந்த துயரத்திலிருந்து மீள வலிமை கிடைக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரவெடிக்கு உச்சநீதிமன்றம் தடை !