Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை பாலோ செய்கிறாரா அஜித்?

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (16:24 IST)
‘விஸ்வாசம்’ படத்தில், விஜய்யை பாலோ செய்கிறாரா அஜித்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
விஜய் நடிப்பில் கடைசியாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தில், மூன்று வேடங்களில் நடித்திருந்தார் விஜய். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். அத்துடன், வடிவேலு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சத்யன், யோகிபாபு என 4 காமெடி நடிகர்கள் நடித்திருந்தனர்.
 
அதேபோல, அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்திலும் இதுவரை 3 காமெடி நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகிய மூவர்தான் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்க உள்ளனர். எனவே, விஜய்யை அஜித் பாலோ செய்வதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
 
சிவா இயக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments