Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர் தோல்விகளால் துவண்டு போகாத ஃபீனிக்ஸ் பறவை அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் ரீவைண்ட்!

Advertiesment
தொடர் தோல்விகளால் துவண்டு போகாத ஃபீனிக்ஸ் பறவை அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் ரீவைண்ட்!
, வெள்ளி, 1 மே 2020 (09:40 IST)
சினிமாவின் தலையாய நடிகர் அட்லட்டிமேட் ஸ்டார் தல அஜித் இன்று தனது இன்று தனது 50-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார்.  அவருக்கு ரசிகர்கள் , நண்பர்கள் , பிரபலங்கள் என தொடர்ந்து வாழ்த்து கூறி வருகின்றனர். பந்தாக்களை எதிர்பார்க்காத , ஆடம்பர வாழ்க்கைக்கு அடிபணியாத , குணத்தில் தனமையுள்ள அஜித் தான் உண்டு தன் தொழில் உண்டு என்று சாதாரண மக்களை போல் வாழ விரும்புபவர்.

இன்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட தல அஜித் இந்த இடத்தை அடைய அவர்பட்ட  தோல்விகள் கணக்கிடமுடியாதவை. சிலரின் வாழ்க்கையைத் திரும்பி பார்த்தால் அவர்கள் இருக்கும் இடத்தை அடைய அவர்கள் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு அதற்காக கடினமாக உழைத்து இப்போது இருக்கும் இடத்தை அடைந்திருப்பார்கள். ஆனால் சிலரின் வாழ்க்கை எதிர்பாராத சில விபத்துகளால் தடம்புரண்டு அவர்கள் நினைக்காத ஏதோ ஒரு இடத்தின் உச்சத்தில் அவர்களைக் கொண்டுவந்து வைத்திருக்கும்.

நடிகர் அஜித் இதில் இரண்டாவது ரகம். சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது அவரது ஆசை அல்ல. ரேஸ்களில் கலந்துகொள்வதற்கும், தனக்குப் பிடித்த பைக்குகள் மற்றும் கார்கள் போன்றவற்றை வாங்குவதற்கும் தேவையானப் பணத்திற்காக மாடலிங் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவருக்கு எதிர்பாராமல் "பிரேம புஸ்தகம்" எனும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புக் கிடைக்கிறது. அதையடுத்து உடனடியாக தமிழில் "அமராவதி" படத்தின் வாய்ப்புக் கிடைக்கிறது.
webdunia

அப்போதெல்லாம் தான் ஒரு சிறந்த நடிகனாக வர சினிமாவில் தொடர்ந்து நடிக்கப்போகிறோம் என அஜித்துக்கு துளியும் நம்பிக்கையில்லை. படவாய்ப்புகள் கிடைக்கும் வரை சம்பாதித்துவிட்டு தனக்குப் பிடித்த பைக் ரேஸ் துறையில் ஈடுபடவேண்டும் என்பதே அவரது ஆசை. அதெல்லாம் ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்கள் வெளியாகும் வரைதான். அந்தப் படங்களின் வெற்றி ரசிகர்கள் மனதில் அழியாத இடத்தை அஜித்திற்குக் கொடுத்தது. தமிழ் சினிமாவிலும் தவிர்க்க முடியாத கதாநாயகனாக உருவாக ஆரம்பித்து அவருக்கென்று ரசிகர்கள் வட்டம் மல மலவென உருவாக ஆரம்பித்து வருகிறது.

என்ன செய்வதென யோசித்த தனது கனவான பைக் ரேஸிங்கை சில மாதங்களுக்கு ஒத்திவைக்கிறார். தொடர்ந்து படங்களில் நடிக்கிறார் . சில படங்கள் வெற்றி… சில படங்கள் தோல்வி… ஆனால் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. முயற்சியை தளர விடாமல் தொடர்ந்து  தீனா, வில்லன் போன்ற ஆக்‌ஷன் படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாகிறார். அதையடுத்து பெரிய எதிர்பார்ப்பில் நடிக்கும் அத்தனை படங்களும் தொடர்ந்து தோல்விகளை தழுவுகிறது. தனது சக நடிகர்கள் எல்லோரும் ஹிட் படங்களாக கொடுத்து மேலே மேலே போகின்றனர். போட்டி நடிகர்களின் ரசிகர்கள் அஜித் ரசிகர்களைக் கேலி செய்ய ஆரம்பிக்கின்றனர். இங்கு தான் அஜித் சக நடிகருக்கு போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.  
webdunia

இருந்தாலும், அஜித் மீது அலாதி நம்பிக்கை வைத்திருக்கும் ரசிகர்கள் ஒரே ஒரு வெற்றிக்காக அவரது அடுத்த இன்னிங்க்ஸை நோக்கி காத்திருக்கின்றனர். வெற்றியோ தோல்வியோ எதுவானாலும் எதிர்கொள்ளும் என திடமானதோடு வரலாறு படத்தின் முதல் நாள் காத்திருக்க படம் அமோக வெற்றி அடைகிறது. மூன்று கதாபாத்திரத்தில் பின்னியெடுத்த அஜித்தை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். அதன் பின்னர் பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என இளைஞர்களைக் குறிவைத்து அஜித்தின் படங்கள் வெளியாக பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் வருவது குறைகிறது. அந்த குறையைப் போக்க அஜித் சிறுத்தை சிவாவோடுக் கைகோர்க்கிறார். வீரம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என பிளாக்பஸ்டர் ஹிட்களைக் கொடுக்கிறது.
webdunia

தனது வயதிற்கும் , சமூகத்தின் மீதுள்ள அக்கரைக்கும் ஏற்றவாறு "நேர்கொண்ட பார்வை" படத்தில் நடித்து அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். குறிப்பாக பெண்கள். அதையடுத்து தற்போது போனி பக்கப்பூர் தயாரிப்பில் "வலிமை" படத்தில் தனது நிஜ வாழ்க்கையை மையப்படுத்திய பைக் ரேஸராக நடித்து வருகிறார். எனவே அஜித்தின் சினிமா வாழ்க்கையை ஒருநிமிடம் திரும்பிப் பார்த்தோமானால் வெற்றியை விட தோல்விகளே அதிகம்….  விருதுகளை விட அவமானங்களே அதிகம்… ஆனால் அஜித் என்றும் தோல்விகளால் துவண்டதில்லை. விழும்போதெல்லாம் எழுவார்… ஃபீனிக்ஸ் பறவை போல் எழுந்து அடுத்த இலக்கை நோக்கி வேகமாக ஓடுவார்… வலிகள் மிகுந்த வெற்றி நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கிலோ ரவாவில்… கொரோனா காலத்தில் பார்த்திபன் செய்தது இதுதான்!