சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தல அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி இரண்டும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டன. இந்த போட்டியில் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதென்னவோ ரஜினியாக இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்த படம் அஜித்தின் விஸ்வாசம் தான்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	ஆம், கமர்ஷியல் கதைக்களத்தில் கிராமம் , குடும்பம் , மனைவி , மகள் என பாசப்பிணைப்பை கொண்டு வெளிவந்த விஸ்வாசம் ஃபேமிலி ஆடியன்ஸை அலேக்காக அள்ளியது. படம் வெளியான ஆரம்பத்தில் விஸ்வாசத்திற்கு கூட்டம் அலைமோதியது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல கலெக்ஷனில் கல்லா கட்டியதென்னவோ சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படம் தான். இதனால் இனி இப்படி இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகக்கூடாது என தியேட்டர் நிறுவனங்கள் கருத்து கூறியது.
 
									
										
			        							
								
																	ஆனால், தற்போது அஜித்தின் வலிமை படமும் ரஜினியின் அண்ணாத்த படமும் ஒரே களத்தில் இறங்கவுள்ளது.  வருகிற 2021 ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இந்த இரண்டு படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால்,  இந்த முறை மொத்த வெற்றியும் ரஜினிக்கு தான் என யூகித்துள்ளது கோடம்பாக்கம். காரணம் அண்ணாத்த படம் காதல் , மனைவி , தங்கை என கமர்ஷியல் களத்தில் இறங்கி அடிக்கப்போகிறது. எனவே அஜித்தின் வலிமை வெற்றிக்கு பின்னடைவு தான் ஏற்படும் என்று கோலிவுட் சினிமாக்காரர்கள் இப்போதே கணித்துவிட்டனர்.எது என்ன ஆகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.