Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழையும் 90ஸ் சாக்லேட் பாய்!

Advertiesment
பிக்பாஸ்  வீட்டில் போட்டியாளராக நுழையும் 90ஸ் சாக்லேட் பாய்!
, திங்கள், 4 செப்டம்பர் 2023 (15:03 IST)
பிக்பாஸ் தமிழ் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இப்போது ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது புதிய ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவின் மூலம் இந்த சீசனில் பிக்பாஸில் இரண்டு வீடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் அப்பாஸ் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 90 களில் பிரபலமான கதாநாயகனாக வலம்வந்த அப்பாஸ் அதன் பிறகு நியுசிலாந்து சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். சமூக ஊடகங்கள் மூலமாக மீண்டும் ரசிகர்கள் இடையே பிரபலம் ஆன அவர் இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 68 படத்தில் வில்லன் இவர்தானா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!