Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 68 படத்தில் வில்லன் இவர்தானா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

தளபதி 68 படத்தில் வில்லன் இவர்தானா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
, திங்கள், 4 செப்டம்பர் 2023 (14:55 IST)
விஜய், தற்போது நடித்துள்ள லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  தன்னுடைய 68 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். சமீபத்தில் படத்தில் விஜய்யின் தோற்றத்துக்காக விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுவந்தனர்.

இந்த படத்தில் அப்பா, மகன் மற்றும் வில்லன் என மூன்று முக்கிய வேடங்களிலும் விஜய்யே நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட்!