Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த லெவலுக்கு சென்ற சப்தம்… புகைப்படத்தை வெளியிட்ட ஆதி!

அடுத்த லெவலுக்கு சென்ற சப்தம்… புகைப்படத்தை வெளியிட்ட ஆதி!
, சனி, 15 ஜூலை 2023 (12:15 IST)
ஈரம் மற்றும் குற்ற்ம் 23 ஆகிய படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இதையடுத்து சமீபத்தில் இவர் இயக்கிய தமிழ்ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸ் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கிடையில் அவர் அருண் விஜய் நடிப்பில் இயக்கிய பார்டர் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இந்நிலையில் இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவழகன் மீண்டும் ஆதி நடிக்கும் சப்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் ஒரு பேய் த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு சப்தம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க,  முக்கியக் கதாபாத்திரங்களில் லைலா மற்றும் சிம்ரன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் இப்போது படத்தின் டப்பிங்கை நடிகர் ஆதி தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷுட் புகைப்படங்கள்!