Publish Date: Wed, 03 May 2023 (21:42 IST)
Updated Date: Wed, 03 May 2023 (21:49 IST)
ஐபிஎல்-16 வது சீசனில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், மும்பை அணிக்கு 215 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.
எனவே, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது,. அதன்படி, பிராப்சிம்ரன் 9 ரன்களும், தவான் 30 ரன்களும், மாட் ஷார்ட் 27 ரன்களும், லிவிங்ஸ்டன் 82 ரன்களும், ஷர்மா 49 ரன்களும் அடித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து, மும்பை அணிக்கு 215 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சாவ்லா 2 விக்கெட்டும், கசர்ஷட் கான் 1 விக்கெடும் கைப்பற்றினர்.
தற்போது மும்பை 3 ஓவர்களில் முடிவில் 22 ரன்களுடன் விளையாடி வருகிறது.