Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 14 January 2025
webdunia

சிவபெருமானாக நடித்துள்ள துல்கர் சல்மான்

Advertiesment
சிவபெருமானாக நடித்துள்ள துல்கர் சல்மான்
, புதன், 6 செப்டம்பர் 2017 (10:54 IST)
சிவபெருமானின் நான்கு கேரக்டர்களில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்.
 
 
பிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘சோலோ’. நிலம், நீர், காற்று, நெருப்பு என பஞ்ச பூதங்களில் நான்கை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 4 வேடங்களில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
 
துல்கர் நடித்துள்ள 4 வேடங்களுமே, சிவபெருமானின் 4 கேரக்டர்களை மையப்படுத்தி அமைந்துள்ளன. ஷேகர், த்ரிலோக், ருத்ரா  மற்றும் சிவன் ஆகியவை. இதில், இரண்டு கேரக்டர்கள் காதலை மையப்படுத்தியும், இரண்டு கேரக்டர்கள் கோபத்தை மையப்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் இடம்பெற்ற சிவதாண்டவ நடனம் சமீபத்தில் வெளியிடப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 மாதங்கள் கழித்து 2மணி நேரம் பரோல்; சிறையிலிருந்து வெளியே வந்த நடிகர் திலீப்