Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 மாதங்கள் கழித்து 2மணி நேரம் பரோல்; சிறையிலிருந்து வெளியே வந்த நடிகர் திலீப்

Advertiesment
2 மாதங்கள் கழித்து 2மணி நேரம் பரோல்; சிறையிலிருந்து வெளியே வந்த நடிகர் திலீப்
, புதன், 6 செப்டம்பர் 2017 (10:33 IST)
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் திலீப் 2 மாதங்களுக்கு பிறகு பரோலில் வெளியே வந்தார்.


 

 
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது தந்தையின் நினைவு தின சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் கோரியிருந்தார். அதன்படி சுமார் 2 மாதங்களாக சிறையில் இருந்த திலீப் வெளியே வந்தார். 
 
பரோலில் வெளியே வந்த திலீப்புக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் மட்டுமே அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இன்றே சிறைக்கு திரும்ப செல்வார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'மெர்சல்' ஒரிஜினலை கண்டுபிடித்த நெட்டிசன்கள்! நொந்து போன படக்குழுவினர்