Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் பற்றி தப்பாக பேசினால் சோடா பாட்டில் பறக்கும்: சொன்னது யார் தெரியுமா?

Advertiesment
அஜித் பற்றி தப்பாக பேசினால் சோடா பாட்டில் பறக்கும்: சொன்னது யார் தெரியுமா?
, வியாழன், 16 நவம்பர் 2017 (15:48 IST)
அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானவர் நம்ம தல அஜித். தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர். இவரின் படங்கள் மிகப்பெரிய ஓபனிங் இருக்கும். அஜித்தின் ஸ்டைலுக்காகவே பலர் அவரது  ரசிகர்களாக இருப்பார்கள்.

 
 
அஜித்துக்கு பெரும்பாலும் இளைஞர்கள்தான் ரசிகர்களாக இருப்பார்கள். ஆனால் தற்போது வயதான பெண்மணி ஒருவர், நடிகர் அஜித்துக்கு ஆதரவாகப் பேசும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
 
இந்த வீடியோவில் வயதான பெண்மணி, அஜித் அன்னதானம், ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் எனப் பல உதவிகள்  செய்கிறார். மேலும் கொட்டிவாக்கத்தில் இளைஞர் ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ததாகவும் கூறியுள்ளார். அஜித்தை பற்றி தவறாகப் பேசினால் சோடா பாட்டில் பறக்கும் என்றும் துப்புரவு தொழிலாளியான அந்தப் பெண்மணி சென்னை வட்டார மொழியில் கோபமாக வீடியோ வெளியாகியுள்ளது.
 
இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
 
— THALA AJITH (@iam_K_A) November 16, 2017

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீரன் அதிகாரம் ஒன்று - முன்னோட்டம்