Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துப்பாக்கியால் சுட்ட பின்னும் கொள்ளையர்களை விரட்டியடித்த ஏடிஎம் காவலாளி; வைரல் வீடியோ

Advertiesment
துப்பாக்கியால் சுட்ட பின்னும் கொள்ளையர்களை விரட்டியடித்த ஏடிஎம் காவலாளி; வைரல் வீடியோ
, வியாழன், 16 நவம்பர் 2017 (14:15 IST)
டெல்லியில் ஏடிஎம் காவலாளி ஒருவர் தன்னை துப்பாக்கியால் சுட்ட பின்னும் கொள்ளையர்களை விடாமல் விரட்டியடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளது.


 

 
டெல்லி மஜ்ரா தபாஸ் என்ற பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றில் கொள்ளையர்கள் காவலாளியை துப்பாக்கியால் சுட்டு திருட முயற்சித்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பகல் நேரத்தில் இரண்டு பேர் பைக்கில் வந்து ஏடிஎம் காவலாளியை ஒருவன் துப்பாக்கியால் சுடுகின்றான். மற்றொருவன் ஏடிஎம் கதவை உடைக்க முயற்சிக்கிறான். துப்பாக்கியால் சுட்ட பிறகும் ஏடிஎம் காவலாளி அந்த கொள்ளையர்களை உள்ளே போக விடாமல் தடுக்கிறார். 
 
இதையடுத்து அந்த காவலாளி கொள்ளையர்களிடம் பேசுகிறார். பின்னர் அந்த கொள்ளையர்கள் அந்த இடத்தை விட்டு செல்கின்றனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.    
 

நன்றி: ANI & News Nation

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோட்சேவிற்கு கோவில் கட்டி பூஜை: இந்துமகா சபை தடாலடி!