அஜித் ரசிகர்களின் அன்பு மழையால் திக்குமுக்காடி போன அபிராமி!

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (08:42 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த ஞாயிறு அன்று வெளியே வந்த அபிராமி, முதல் வேலையாக செய்தது தான் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தை பார்த்ததுதான். சென்னையில் உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கில் நேற்று அபிராமி, 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார். அஜித் காட்சிகளின்போதும், தனது காட்சிகளின்போதும் ரசிகர்கள் கொடுத்த ஆரவாரத்தை ரசித்தார். மேலும் இடைவேளையின்போது அஜித் ரசிகர்கள் காட்டிய அன்புமழையால் அபிராமி திக்குமுக்காடி போனார் என்பது குறிப்பிடத்தக்கது
 
படம் முடிந்தபின்னர் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர். ஒவ்வொருவரிடம் தனித்தனியாக பொறுமையாக செல்பி எடுத்தார். சிலர் குடும்பத்துடனும் அபிராமியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும் பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து அபிராமி ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
 
முன்னதாக அபிராமி தனது டுவிட்டரில் ஒரு நன்றி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் 'அனைவருக்கும் வணக்கம். இது ஒரு நன்றி வீடியோ. அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகவே ஒரு வீடியோ போட வேண்டும் என்று நினைத்தேன். உங்களுடைய ஆதரவு, அன்பு, வாக்குகள், நம்பிக்கை, இவையனைத்தையும் அளித்த உங்கள் எல்லோருக்கும் நாம் ரொம்பவே கடமைப்பட்டுள்ளேன். ரொம்ப நன்றி' என்று பேசியுள்ளார். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துள்ள அபிராமிக்கு இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Watched #NerKondaPaarvai Yesterdaty Evening #Famithabanu ❣️ pic.twitter.com/qpm8n5KuzL

— Abhirami Venkatachalam (@AbhiramiVenkat_) August 20, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கஸ்தூரி, சேரன்: இந்த வாரம் வெளியேறுவது யார்?