Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யும் அபிஷேக் பச்சன்? - பாலிவுட்டில் அதிர்ச்சி!

Advertiesment
Aishwarya Rai

Prasanth Karthick

, புதன், 23 அக்டோபர் 2024 (13:28 IST)

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யப்போவதாக வெளியாகும் தகவல்கள் பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் அதை தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அதேசமயம் விவேக் ஓபராய், சல்மான் கான் உள்ளிட்டோருடனான காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். பின்னர் கடந்த 2007ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

 

அவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகளும் உள்ளார். நல்லவிதமாக சென்றுக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பிரச்சினை முதலில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் தொடங்கியது.

 

அம்பானி இல்ல திருமண விழாவிற்கு பச்சன் குடும்பத்தினர் ஒன்றாக சென்ற நிலையில் ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் தனியாக சென்றனர். அதை தொடர்ந்து SIIMA Awards விருது நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய்க்கு விருது அளித்தபோது அதில் அபிஷேக் பச்சன் கலந்து கொள்ளவில்லை. 

 

சமீபத்தில் ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தில் ஒருவருக்கு பிறந்தநாள் விழா நடந்துள்ளது. இதில் ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் கலந்து கொண்டனர். ஆனால் அபிஷேக் பச்சன் கலந்து கொள்ளவில்லை. சமீபமாக எந்த நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக செல்லாமல் தனித்தனியாக சென்று வருவது இந்த விவாகரத்து விவகாரத்தை மேலும் பூதாகரமாக்கி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவ்வளவு கவர்ச்சி ஆகாது.. திஷா பதானியால் கங்குவாவுக்கு வந்த புதிய சிக்கல்!