Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது.. குவியும் வாழ்த்துக்கள்..!

பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது.. குவியும் வாழ்த்துக்கள்..!

Siva

, திங்கள், 30 செப்டம்பர் 2024 (11:58 IST)
பழம்பெரும் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளதையடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மத்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி, பெங்காலி உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் மிதுன் சக்கரவர்த்தி என்பதும், இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக கடந்த பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்கதாக உள்ளார். அவர் நடித்த படங்கள் இன்று வரை ரசிகர்களின் நினைவில் உள்ளன. கடந்த 80களில் அவர் நடித்த மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட பல படங்கள், அவரது நடிப்பு மற்றும் நடனத்திற்காகவே வெற்றிப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா துறை மட்டுமின்றி சமூக மற்றும் அரசியல் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்ததை அடுத்து, தாதா சாகேப் பால்கே விருது தற்போது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் மிக உயரிய விருதை பெற்றுள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரியாலிட்டி ஷோ வின்னரான பருத்திவீரன் சுஜாதா!