அது என் தங்கச்சியே கிடையாது. எனக்கு தங்கச்சி என்று யாரும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.
அஞ்சலியின் சித்தி பாரதி தேவி. இவர்தான் அஞ்சலி சினிமாவுக்கு வர காரணமாக இருந்தவர். கருத்து வேறுபாட்டால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். பாரதி தேவியின் மகளான ஆராத்யா, தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இன்னும் அந்தப் படத்துக்கு பெயர் வைக்கவில்லை.
இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது, ‘அஞ்சலி என்னுடைய சகோதரி’ என்று குறிப்பிட்டார் ஆராத்யா. அதைப் பார்த்து கடுப்பான அஞ்சலி, ‘எனக்கு ஒரே ஒரு மூத்த சகோதரி தான் உண்டு. அவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. தங்கச்சி என்று எனக்கு யாரும் இல்லை’ என ஸ்டேட்மெண்ட் விட்டார்.
“அஞ்சலி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரின் கடின உழைப்பும், கடினமான பயணமும்தான் உயரத்தில் வைத்திருக்கின்றன. அவர் என்னை தங்கையாக ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், உண்மை ஒருபோதும் மறையாது” என்கிறார் ஆராத்யா.