முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இம்ரான்கான் கைது செய்யப்படுவதற்கு முன்பு தன் ஆதவாளர்களுக்காக ஒரு வீடியோ அமைதியாக இருக்கும்படி வெளியிட்டிருந்தார்.
ஆனால், இம்ரான்கான் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பஞ்சாப் மாகாணத்தில் இன்று தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர் நடத்திய போராட்டத்தில், 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இம்ரான் கைதை தொடர்ந்து பிடிஐ அலுவலக ஊழியர்களின் வீடுகளையும் சோதனையிட்டதாக இம்ரான்கான் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இம்ரான் கான் தரப்பில் இந்த சிறைத்தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.