Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

vinoth
சனி, 22 மார்ச் 2025 (16:19 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.  இதையடுத்து அவர் இந்தி படம் உள்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷ், அஜித்தை சந்தித்து அவரை வைத்து இயக்க தான் ஒரு கதை சொல்லியுள்ளதாகவும், அந்த கதையைக் கேட்டு அஜித் நேர்மறையான பதிலை சொல்லியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை மற்ற எல்லா விஷயங்களும் சாதகமாக அமையும் பட்சத்தில் தனுஷ் –அஜித் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக ஒரு தகவல் கடந்த சில மாதங்களாகப் பரவி வருகிறது.

இந்த படத்தைத் டாவ்ன் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அவர் பேசியுள்ள அவர் “அந்த படம் சம்மந்தமானப் பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது. எதுவும் இன்னும் உறுதியாகவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments