Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்… யார் யார் தெரியுமா?

vinoth
சனி, 22 மார்ச் 2025 (16:13 IST)
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பத்து தல’ . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம், சிம்பு- தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அவரது 50 ஆவது படம் மற்றும் சிம்பு –அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் அவரது 51 ஆவது படம் என மூன்று அறிவிப்புகள் வெளியாகின.

இதில் முதலில் ‘சிம்பு 49’ படம் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் படத்தின் திரைக்கதையை இயக்குனர் இறுதி செய்யாததால் படம் மே மாதத்தில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் இதுவரை மிருனாள் தாக்கூர் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னொரு கதாநாயகி தேடல் படலம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்.. வசூலில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்துக்கு R சான்றிதழ்தான் கிடைக்குமா?... ரசிகர்கள் அதிர்ச்சி

தக் லைஃப் படத்துக்கு மல்ட்டிப்ளக்ஸ் சங்கத்தினர் அபராதம்… பின்னணி என்ன?

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. மருத்துவமனையில் இருந்து நடிகர் பொன்னம்பலம் உருக்கம்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments