Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் மீண்டும் தொடங்கும் ’பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்…!

vinoth
வெள்ளி, 18 ஜூலை 2025 (08:26 IST)
சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் சார்பில் ‘பராசக்தி’ திரைப்படம் உருவாகி வருகிறது.  முதலில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு கடைசியாக இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. ‘பராசக்தி’ திரைப்படம் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தோடு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும்  என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லம் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையின் சோதனையிட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘பராசக்தி’ திரைப்படம் முடக்கப்படலாம் என சொல்லப்பட்டது.

ஆனால் இயக்குனர் சுதா கொங்கரா இதை மறுத்தார். சிவகார்த்திகேயன் தன்னுடைய மற்றொரு படமான ‘மதராஸி’ படத்தில் நடித்து விட்டு வந்ததும் இந்த படம் தொடங்கும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று முதல் பொள்ளாச்சியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்துக்கு இருந்த சிக்கல்கள் மற்றும் நெருக்கடி ஆகியவை தீர்ந்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று முதல் மீண்டும் தொடங்கும் ’பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்…!

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments