Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

ஆஹா வழங்கும்  ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

J.Durai

, திங்கள், 17 ஜூன் 2024 (13:24 IST)
ஒரு ஐடி அலுவலகத்தில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையையும்  நகைச்சுவை அனைவரும் ரசிக்கும் வகையில், மிக அற்புதமாக கூறிய  “வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸ், இன்றைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்த வெப் சீரிஸ் இளைஞர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.
 
மக்களின் மனம் கவர்ந்த இணையத் தொடராக உருவெடுத்த, ‘வேற மாறி ஆபீஸ்’ தொடரின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக, அத்தொடரின் இரண்டாம் சீசனை  பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது ஆஹா நிறுவனம்.  
 
முற்றிலும் புதிய வடிவத்தில், புதிய களத்தில், கூடுதல் சுவாரஸ்ய அம்சங்களுடன் ‘வேற மாறி ஆபீஸ் - வெப் சீரிஸின் சீசன் 2’ உருவாகவுள்ளது, கடந்த சீசனின் தொடர்ச்சியாக, நிஷா (ஜனனி) தலைமையில் இவர்கள் அனைவரும் ஒரு ஸ்டார்ட் அப் தொடங்குகிறார்கள். அந்நிறுவனம் சந்திக்கும் சவால்கள், பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்வின் பிரச்னைகள் போன்றவற்றை எப்படி ஒருசேர சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்வதே இந்த தொடரின் கதை. 
 
கனா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகாந்த் தயாரிக்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’ தொடரை ஜஷ்வினி இயக்குகிறார். இதில், முதல் சீசனில் முதன்மை வேடத்தில் நடித்த RJ விஜய், சௌந்தர்யா நஞ்சுண்டான் ஆகியோருடன் லொள்ளு சபா மாறன், ஜனனி அசோக்குமார், ஜெயசீலன், ரவீணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இவர்களுடன் ஷ்யாமா, சரித்திரன், விக்கல்ஸ் விக்ரம், பப்பு, ஸ்வப்னா, தாப்பா, விஷ்வா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
 
சென்னையில் கடந்த  12-06-2024 ஆம் தேதி  இந்தத் தொடரின் பூஜை, படக்குழுவினர், தொடரில் நடிக்கும் நட்சத்திரங்களுடன், ஆஹா தமிழ் தளத்தின் குழுவினரும் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
 
முதல் சீசனை விட இரண்டு மடங்கு ஆச்சரியங்களுடன், அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்களுடன், மிக உயர்ந்த தரத்தில் உருவாக்குவதில் ஆஹா தமிழ் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
 
‘வேற மாறி ஆபீஸ்’ -வெப் சீரிஸ் சீசன் 2 வுக்கு, சத்யா ஒளிப்பதிவு செய்ய,  ராகவ் இசையமைக்கிறார். கலை இயக்குநராக நர்மதா பணியாற்ற, படத்தொகுப்பாளராக விக்கி பணியாற்றுகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!