Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவில்பத்து ஸ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

கோவில்பத்து ஸ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

J.Durai

, புதன், 29 மே 2024 (17:49 IST)
திருக்குவளை அருகே கோவில்பத்து ஸ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
 
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த கொடியாலத்தூர் ஊராட்சி வலிவலம் கோவில்பத்தில் ஸ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன் , ஸ்ரீ கழனியப்ப ஐயனார் கோயில் அமைந்துள்ளது
இக்கோயிலில் வைகாசி பெருவிழா  கடந்த மே 26ஆம் தேதி அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை மற்றும் காப்பு கட்டுதலுடன்  துவங்கியது.விழாவின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான திருவிளக்கு பூஜை  நடைபெற்றது.
 
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கினை அம்மாளாக  பாவித்து பட்டு வஸ்திரங்கள் மற்றும் மலர் கோண்டு அலங்கரித்தனர்.
 
தொடர்ந்து  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத
பெண்கள் குங்குமம் மற்றும் மலர் கொண்டு அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
 
தொடர்ந்து உலக அமைதிக்காவும், விவசாயம் செழிக்க வேண்டிய சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
 
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பெண்கள் பங்கேற்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புகையிலை மற்றும் போதை பொருட்கள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு இளம் மாணவ,மாணவிகளுக்கு அவசியம் - மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன்!