என் மனைவியை விட அஜித் சாரிடம்தான் அதை அதிகமுறை சொல்லியுள்ளேன் –ஆதிக் நெகிழ்ச்சி!

vinoth
வியாழன், 17 ஏப்ரல் 2025 (07:09 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

வசூலில் பெரிய அளவில் சாதித்து வரும் இந்த படம் தமிழக அளவில் மட்டும் இன்று 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இந்த படம் விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் எட்டும் என்றும் மேலும் 250 கோடி ரூபாய்க்கு மேலாக திரையரங்குகள் மூலமாக எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து சென்னையில் அந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் “நான் ஏழாவது படிக்கும் போது இருந்து அஜித் சாரின் ரசிகன். அவருக்காக போஸ்டர் எல்லாம் ஒட்டியுள்ளேன். அப்படிப்பட்ட என்னாலேயே அஜித் சாருடன் இணைந்து படம் பண்ண முடிகிறது என்றால் எல்லோராலும் முடியும். நான் என் மனைவி ஐஸ்வர்யாவை விட அதிகமுறை அஜித் சாரிடம்தான் ‘ஐ லவ் யூ’ சொல்லியுள்ளேன். என் அப்பா அம்மாவுக்கு அடுத்த இடத்தில் அஜித் சாரை வைத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments