Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

Mahendran
புதன், 16 ஏப்ரல் 2025 (18:26 IST)
சிம்பு நடிக்க இருக்கும் 49வது திரைப்படத்தை பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்தின் நாயகிகளாக மமீதா பாஜூ மற்றும் காயடு லோஹர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையில், இந்த படத்தில் சந்தானம் ஒரு முக்கியக் கேரக்டரில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் நடிக்க அவருக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது.
 
தான் நாயகனாக நடிக்கும் படங்களில் பெறும் சம்பளத்தையே இந்த படத்தில் கேட்டுள்ளதாக சந்தானம் கூற, முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், சிம்புவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த சம்பளத்துக்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் காமெடி வேடத்தில் சந்தானம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்… ராம் போன்ற இயக்குனர் தமிழ்நாட்டிற்குத் தேவை- இயக்குனர் பாலா!

தனது கனவுப் படத்தின் தயாரிப்பாளரை அறிவித்த எஸ் ஜே சூர்யா..!

பதற்றம் இல்லாமல் தூங்கினேன்… இயக்குனரின் கலைஞராக இருக்க விரும்புகிறேன் – நிமிஷா சஜயன்!

ரஜினியோடு இணைந்து ‘கூலி’ படத்தில் நடனம் ஆடுகிறாரா டி ஆர்?

வாடிவாசல் தள்ளிப் போனதின் காரணம் என்ன?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments