Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

Meiyazhagan

Prasanth Karthick

, வெள்ளி, 24 மே 2024 (18:26 IST)
கார்த்தி – அரவிந்த் சாமி இணைந்து நடிக்கும் மெய்யழகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.



தமிழில் 90ஸ் கிட்ஸின் வாழ்க்கையை காட்டும் விதமாக வெளியான 96 படம் பெரும் ஹிட் அடித்தது. அந்த வகையில் அதே 96 இயக்குனரின் இயக்கத்தில் தற்போது 80-90களை ஞாபகப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ளது கார்த்தியின் ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.

96 திரைப்படத்திற்கு பிறகு ச.பிரெம்குமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அரவிந்த்சாமி சைக்கிளில் செல்வதும், பின்பக்கத்தில் தஞ்சை பெரிய கோவிலின் ஓவியமும் உள்ளது. டைட்டிலும் பழைய பட போஸ்டர்களை ஞாபகப்படுத்துகின்றன.

96 படத்தில் 90களின் காலக்கட்டத்தை பிரேம் குமார் அழகாக கொண்டு வந்திருந்தார். அந்த கதையும் தஞ்சாவூரில்தான் நடக்கும். தற்போது அதேபோல முழுவதுமாக தஞ்சாவூரில் நடப்பதாக ஒரு கதையை பிரேம் குமார் உருவாக்கியிருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!