Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

SK

Raj Kumar

, செவ்வாய், 21 மே 2024 (16:33 IST)
தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.



இதனாலேயே அவர்களை கவரும் வகையில் திரைப்படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் நடித்த டான், ப்ரின்ஸ், மாவீரன், அயலான் போன்ற திரைப்படங்கள் எல்லாம் அந்த வகையில் எஸ்.கே நடித்த திரைப்படங்கள்தான்.

இந்த நிலையில் அடுத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். எஸ்.கேவின் மற்ற படங்கள் போல் அல்லாமல் முழுக்க முழுக்க இது சீரியஸான திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கருடன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிவகார்த்திகேயன் வந்திருந்தார். அதில் நடிகை வடிவுகரசியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது,  ”இந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.



ஒவ்வொரு காட்சியையும் எனக்கு மிகவும் பிடித்தே நடித்திருக்கிறேன். சீக்கிரத்தில் சிவகார்த்திகேயனுடனும் நடிப்பேன் என நம்புகிறேன்” எனக் கூறிய வடிவுகரசி. “இப்படி பலமுறை கூறிவிட்டேன். ஆனால் இப்போது வரை என்னை சிவகார்த்திகேயன் நடிக்க வைக்கவே இல்லை. இதற்கு மேலும் வாய்ப்பு தரவில்லை என்றால் அவர் கம்பெனியில் சேர்ந்துவிட போகிறேன்” எனக் கூறினார் வடிவுகரசி.

உடனே இருக்கையில் இருந்து எழுந்து வந்த சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!