Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் மூன்றாவது சிங்கிள் எப்போ? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான்

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (09:31 IST)
கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பலராலும் விரும்பிக் கேட்கப்படும் ஒரு பாடலாக அமைந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது சிங்கிள் பாடலாக ‘சோழா சோழா’ பாடல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து மூன்றாவது பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் என ரஹ்மான் இப்போது தெரிவித்துள்ளார். டிவிட்டரில் ரசிகர் ஒருவர் “ஸ்ரேயா கோஷல் பாடிய பாடலை சீக்கிரம் வெளியிடுங்கள்’ என ரஹ்மானை டேக் செய்து டிவீட் செய்திருந்தார். அவருக்கு பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான் ‘செப்டம்பர் முதல் வாரம் வரை காத்திருங்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments