Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் ‘சோழா சோழா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் ‘சோழா சோழா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு
, புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:20 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பலராலும் விரும்பிக் கேட்கப்படும் ஒரு பாடலாக அமைந்துள்ளது.

இதையடுத்து இரண்டாவது சிங்கிள் பாடலாக ‘சோழா சோழா’ பாடல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘மாவீரன்’ படப்பிடிப்பு இன்னும் ஒரே ஒரு ஷெட்யூல் தான்: படக்குழு தகவல்!