Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மி டூ சர்ச்சைக்குப் பிறகு சின்மயிக்கு வாய்ப்பளித்த ஏ ஆர் ரஹ்மான்?

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (14:46 IST)
தமிழ் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சின்மயி. அந்த படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருது வரை சென்றது. அதன் பிறகு பல மொழிகளில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடலாசிரியர் வைரமுத்து மீது மீ டு குற்றச்சாட்டை வைத்த அவர், தன்னை போல பாதிக்கப்பட்ட பல பெண்களின் மி டு புகார்களையும் தன்னுடைய டிவிட்டர் பக்கம் மூலமாக வெளியிட்டார். இதன் மூலம் சர்ச்சைகளின் மையமாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு பாடல் பாடும் வாய்ப்புகள் மற்றும் பின்னணிக் குரல் கொடுக்கும் வாய்ப்புகள் பறிபோனதாகவும் சொல்லப்பட்டது.

அவருக்கு அதிகளவில் வாய்ப்புகளைக் கொடுத்த ரஹ்மானும், அந்த சர்ச்சைக்குப் பின்னர் அவருக்கு வாய்ப்புகளை வழங்கவில்லை. இந்நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் 2 வில் சின்மயிக்கு ரஹ்மான் ஒரு பாடலை பாடும் வாய்ப்பை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதை உறுதி செய்வதுபோல சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments