Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 26 March 2025
webdunia

துருக்கி நிலநடுக்கம்: கவிஞர் வைரமுத்துவின் உருக்கமான கவிதை..!

Advertiesment
vairamuthu
, செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (18:36 IST)
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக சுமார் 5000 பேர் பலியாகியுள்ளதாகவும் ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் துருக்கி நாட்டிற்கு ஏற்பட்ட துரதிஷ்டமான இந்த நிலைக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டரில் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த கவிதை இதோ:
 
துருக்கியின் கீழே
பூமி புரண்டு படுத்துவிட்டது
 
ரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டன
 
வான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டன
 
மனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டன
 
மாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்
 
உலக நாடுகள்
ஓடி வரட்டும்
 
கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் கௌதம் மேனனுக்கு இனிமேல் படம் இல்லை… சிம்பு எடுத்த திடீர் முடிவு!