தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா ஆகியோரை வைத்து இயக்கிய சிக்கந்தர் படம் படுதோல்வி படமாக அமைந்தது. அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார்
அதையடுத்து தற்போது மதராஸி படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தின் இறுதிகட்டக் காட்சிகள் கடந்த சில வாரங்களாக இலங்கையில் படமாக்கப்பட்டன. தற்போது அந்த படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. அதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் முருகதாஸ் “மதராஸி படத்தின் கதை கஜினி படம் போன்ற ஒரு பழிவாங்கும் கதைதான். ஆனால் படத்தில் காதல்தான் மையக் கருவாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்க அவரின் கொலைக்குப் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சொல்லப்படுகிறது.