முருகதாஸ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம்… தயாரிப்பாளராக சூர்யா?

vinoth
புதன், 30 அக்டோபர் 2024 (09:28 IST)
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவராக இருந்த முருகதாஸ் தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்தார். இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இரண்டு படங்களின் ஷூட்டிங்கையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.

இதற்கிடையில் அவர் கஜினி2 படத்தை இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அவர் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் ஒரு படத்தையும் இயக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன ஏன் தல மேல தூக்கி வச்சுக் கொண்டாடுறாங்க… அடுத்த சர்ச்சையைக் கிளப்பிய ராஜகுமாரன்!

எல் ஐ கே ரிலீஸில் இருந்த குழப்பம்… புத்திசாலித் தனமாக தப்பித்த தயாரிப்பாளர் லலித் குமார்!

கருப்பு படத் தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிய ’சூர்யா 46’ தயாரிப்பு நிறுவனம்!

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments