Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோமாளி இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம் !

கோமாளி இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம் !
, புதன், 25 செப்டம்பர் 2019 (10:24 IST)
கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த ஆண்டு வெளியாகி தயாரிப்பாளர் முதல் விநியோகஸ்தர் வரை அனைவருக்கும் லாபம் கொடுத்த படத்தில் கோமாளி படமும் ஒன்று. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்க்கு புது ஹோண்டா சிட்டி காரைப் பரிசாக அளித்தார்.

கோமாளி வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் இயக்கும் இரண்டாவது படத்தையும் வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷனல் சார்பில் மீண்டும் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறுகிய கால படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை – ரோஹினி தியேட்டருக்கு அபராதம் !