Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தையை அடுத்து விபத்தில் சிக்கிய இசையமைப்பாளர் பலி

Advertiesment
குழந்தையை அடுத்து விபத்தில் சிக்கிய இசையமைப்பாளர் பலி
, செவ்வாய், 2 அக்டோபர் 2018 (07:20 IST)
கேரளாவில் பிரபல இசையமைப்பாளரான பாலா பாஸ்கர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
மலையாள திரையுலகில் பிரபல இசையமைப்பாளரான பாலா பாஸ்கர் ஒரு வாரத்திற்கு முன்னர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் திருச்சூரில் உள்ள ஒரு கோவிலுக்கு காரில் சென்றுள்ளார்.
 
கோவிலில் தரிசனம் முடிந்த பிறகு காரில் குடும்பத்தினரோடு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார் பாலா. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
 
இந்த கோர விபத்தில் அவரின் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழக்க, பாலாவும் அவரது மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள்.
 
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாலா, இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கேரள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளம்பிட்டாலே விஜயலட்சுமி ! ஜோதிகாவுக்கு சூப்பர் வரவேற்பு