Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: முதல் போட்டியில் வெற்றி பெற்ற கேரளா

Advertiesment
ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: முதல் போட்டியில் வெற்றி பெற்ற கேரளா
, சனி, 29 செப்டம்பர் 2018 (22:29 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இன்று முதல்  ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடர் ஆரம்பமாகியது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் கேரள அணிகள் மோதிய நிலையில் கேரள அணி கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும்  ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடரில் முதல் போட்டியாக இன்று கொல்கத்தா மற்றும் கேரள அணிகள் மோதியது. முதல் பாதியில் இரு அணிகளும் எவ்வளவோ முயன்றும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கோல்கணக்கில் சமநிலை இருந்தது.

webdunia
இந்த நிலையில் 2ஆம் பாதியில்  77-வது நிமிடத்தில் கேரள அணியின் போப்லாட்னிக் கோலாக்கி ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார். அதன் பின்னர் 86-வது நிமிடத்தில் கேரள அணியின் சிலாவிசா ஸ்ஜானோவிக் 2-வது கோலை  அடித்ததால் அந்த அணி 2-0 என்று முன்னிலைப் பெற்றது.

அதன்பின்னர் இறுதிவரை கொல்கத்தா கோல் எதுவும் போடாததால் 2-0 என்ற கோல்கணக்கில் கேரளா வெற்றி பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரிய பேட்மிண்டன் போட்டி - இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி