Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்கூல் லவ் வேண்டாம்! சமந்தா கண்டிஷனை ஏற்று கொண்ட இயக்குனர்

Advertiesment
ஸ்கூல் லவ் வேண்டாம்! சமந்தா கண்டிஷனை ஏற்று கொண்ட இயக்குனர்
, வியாழன், 24 ஜனவரி 2019 (22:27 IST)
இயக்குனர் பிரேம்குமாரின் இயக்கத்தில் ராம்-ஜானு கேரக்டரில் விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்த '96' திரைப்படம் தெலுங்கில் தயாராக உள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இயக்கவுள்ள இந்த படத்தில் ராம்-ஜானு கேரக்டரில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கு ரீமேக் 96 படத்தில் தமிழில் இருந்த ஸ்கூல் காதல் காட்சிகள் கிடையாதாம். அதற்கு பதிலாக கல்லூரியில் தான் ராம்-ஜானு இடையே காதல் ஆரம்பிக்கும் வகையில் கதை தொடங்கப்படுமாம். அதேபோல் கதை நடக்கும் ஆண்டு 1999 என்றும் மாற்றப்பட்டுள்ளது.

உணர்ச்சி மிகுந்த பள்ளிக்காதலை திரையில் பார்த்தால் பள்ளி மாணவ, மாணவிகளின் மனம் சஞ்சலப்படும் என்பதால் ஸ்கூல் காதலுக்கு பதிலாக கல்லூரி காதலை வைத்து கொள்ளலாம் என்று சமந்தாவின் நிபந்தனையை இயக்குனரும் ஏற்றுக்கொண்டாராம்

webdunia
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. மேலும் தமிழில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே தெலுங்கு ரீமேக்கிலும் பணிபுரிவார்கள் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'இந்தியன் 2' படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத்! வாழ்த்து சொன்ன ஷங்கர்!