Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜாவுக்காக இணையும் 10 கதாநாயகர்கள்

Advertiesment
இளையராஜாவுக்காக இணையும் 10 கதாநாயகர்கள்
, திங்கள், 14 ஜனவரி 2019 (07:39 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ என்ற இசை நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை  சமீபத்தில் தொடங்கிய நிலையில் ஆயிரக்கணக்கானோர் ஆன்லைனில் இந்த நிகழ்ச்சியை நேரடியாக கண்டு ரசிக்க டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை நந்தனம் மைதானத்தில் பிப்ரவரி 2,3, ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில்  கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், உள்பட பல நிகழ்ச்சிகள் பார்ப்போரை பரவசப்படுத்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோஷனுக்காக தயாரிக்கப்பட்ட ‘இளையராஜா75’ டீசரை ஒரே நேரத்தில் விஷால், ,கார்த்தி, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி,ஆர்யா, விஷ்ணு விஷால் ஜீவா, ,அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா ஆகிய 10 கதாநாயகர்கள் தங்களது டுவிட்டர் பக்கங்களில் டுவீட் செய்து பரவசப்படுத்தியுள்ளனர் அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் தாங்களும் கலந்து கொள்வதாக இந்த 10  கதாநாயகர்கள் அறிவித்துள்ளனர்.

webdunia
பிப்ரவரி 2-ம் தேதி இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் நடனமாடுகிறார்கள். இளையராஜா அதனை கண்டு ரசிக்கின்றார். அடுத்தநாள் பிப்ரவரி 3-ம் தேதி இளையராஜா அவரது குழுவினருடன் சேர்ந்து நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த இரண்டு நாள் விழாவினை நேரிலும் தொலைக்காட்சி மூலமும் காண கோடிக்கணக்கான இசைராஜாவின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஷால் கைதா! அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படத்தால் பரபரப்பு