Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இணையும் 96 படக்கூட்டணி… இயக்குனருக்கு நம்பிக்கைக் கொடுத்த விஜய் சேதுபதி!

மீண்டும் இணையும் 96 படக்கூட்டணி… இயக்குனருக்கு நம்பிக்கைக் கொடுத்த விஜய் சேதுபதி!
, செவ்வாய், 17 மே 2022 (15:35 IST)
96 படம் மூலமாக விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தவர் இயக்குனர் பிரேம்குமார்.

கடந்த 2018  ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 96. ரிலிஸுக்கு முன்னர் பல சிக்கல்களைக் கடந்து திரையரங்குகளுக்கு வந்த 96 படம், ரிலிசுக்குப் பின் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படமான 96 படம் வழக்கம்போல இளைஞர்களை மட்டும் கவராமல் கல்யாணம் ஆகி தனது மத்திய வயதுகளில் இருக்கும் 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களையும் கவர்ந்தது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இதே படத்தை தெலுங்கில் இயக்கினார் பிரேம்குமார். ஆனால் தமிழில் பெற்ற வெற்றியை தெலுங்கில் பெறவில்லை. இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கிய பிரேம்குமார், இப்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு இணைகிறாராம். அவர் சொன்ன கதையைக் கேட்ட விஜய் சேதுபதி ‘எப்போது வேண்டுமானாலும் உங்கள் படத்தில் நடிக்க தயார்’ எனக் கூறி சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தோஷ் சிவன் திரைப்படத்தில் இருந்து வெளியேறிய விஜய் ஆண்டனி? இதுதான் காரணமா