Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

90-ஸ் கிட்ஸின் ஃபேவரெட் நடிகர் சினிமாவில் ரீ எண்ட்ரீ?

Advertiesment
cinema
, வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (14:41 IST)
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். இவர் 90-ஸ் கிட்ஸின் ஃபேவரெட் நடிகர் ஆவார். இவர்., கொல்கத்தாவின் பிறந்து, மும்பையில் படித்து, பெங்களூரில் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

அதன்பின்னர்.  தமிழில் காதல் தேசம், இனி எல்லாம் சுகமே, படையப்பா, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே, மின்னலே உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

தர்மயுத்தம், வைதேகி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.  அதன்பின்னர், நியூசிலாந்தில் தன் குடும்பத்துடன் செட்டிலாகி, பைக் மெக்கானிக் ஆக பணியாற்றி சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிட்டு, ரசிகர்களுடன் உரையடி வந்தார்.
webdunia

இந்த  நிலையில்,  நடிகர் அப்பாஸ் மீண்டும் சென்னை திரும்பி சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: சில சொந்தக் காரணங்களால் சினிமாவில் இருந்து விலகியிருந்தேன். எதாவது தொழில் செய்து என்னை அடையாளப்படுத்தவே நியூசிலாந்து சென்று, மெக்கானிக் வேலை செய்து வந்தேன். தற்போது இந்தியா திரும்பியுள்ளார். சினிமா என்னை ஏற்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிக்காம கொட்டும் வசூல் மழை… சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?