Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

83 வருடங்களுக்கு நெட்பிளிக்ஸ் இலவசம்: ஆச்சரிய தகவல்

Advertiesment
83 வருடங்களுக்கு நெட்பிளிக்ஸ் இலவசம்: ஆச்சரிய தகவல்
, ஞாயிறு, 19 ஜூலை 2020 (07:30 IST)
உலகம் முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படாததால் திரைப்படம் பார்க்க இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி நெட்பிளிக்ஸ், அமேசான், சன் நெக்ஸ்ட் போன்ற ஓடிடி தளங்கள் தான்
 
இந்த நிலையில் உலகின் முன்னணி ஓடிடி தளமாக இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது நெட்பிளிக்ஸ் கூறும் ஒரு வீடியோகேம் விளையாடி வெற்றி பெற்றுவிட்டால் 83 வருடங்களுக்கு இலவச சந்தா கிடைக்கும்
 
ஓல்டு கார்ட் கேம் என்று அழைக்கப்படும் இந்த லாபிரிஸ் என்ற கேமில் யாராலும் அழிக்கமுடியாத இனத்திற்காக விளையாட வேண்டும். இந்த கேமில் நீங்கள் எதிரிகளை அழிக்க வேண்டும். இதில் உங்களுக்கு ஆயுதமாகப் பிரம்மாண்டமான, இரட்டை-பிளேடட் கோடரியை பயன்படுத்தலாம்.  அதிக எதிரிகளைக் கொன்று வீழ்த்துவதே கேமின் டாஸ்க். அதேபோல் எதிரிகளிடம் இருந்து அடிபடுவதை தவிர்க்கவும் வேண்டும் அதே நேரத்தில் விரைவாக எதிரிகளைக் கொல்லவும் வேண்டும்.
 
இன்று ஒரு நாள் மட்டுமே இந்த சலுகை. இந்த சலுகையின்படி இந்த வீடியோ கேமை விளையாடி அதிக ஸ்கோர் பெற்றால் 83 வருடச் சந்தா முற்றிலுமாக இலவசமாக வழங்கப்படும். ஆனால் இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் பயனர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு...CommonDP -ஐ டிரெண்டிங் செய்த ரசிகர்கள்