ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’  படமும் நேரடியாக OTT விறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் தற்போது இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய கங்கனா, " ஆம், தலைவி படம்  Netflix மற்றும்  Amazon என்ற இரண்டு முக்கிய OTT தளங்களுக்கு விற்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் இப்படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக OTTயில் வெளியாகாது. தியேட்டர்களுக்காகத்தான் இந்த படம் இவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது எனவே தலைவிக்கு நேரடி OTT-யை விட தியேட்டர் ரிலீஸ் தான் தகுதியானது என அவர் கூறினார்.
 
									
										
			        							
								
																	ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் இப்படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமியும் சோபன்பாபு கேரக்டரில் வங்காள மொழி நடிகர் ஒருவரும் நடித்து வருகிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படம் ஜூன் 26ம் தேதி வெளியாகவேண்டியது. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பேயில்லை.