Webdunia - Bharat's app for daily news and videos

Install App

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

Siva
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (18:44 IST)
இந்தியாவின் 71வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' திரைப்படம், சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது.
 
2023ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஒரு பார்க்கிங் இடத்திற்காக இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் சிறிய மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
 
இது தவிர, 'வாத்தி' திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டு தேசிய விருதுகள் போட்டியில், நாடு முழுவதிலுமிருந்து 332 திரைப்படங்கள் பங்கேற்றன. அவற்றில், பல்வேறு மொழிகளிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

நயன்தாரா மாறவில்லை.. யூடியூபர்களின் கிண்டலுக்கு ரசிகர்கள் பதிலடி..!

தனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் ஏஐ உதவியால் மாற்றப்பட்டதா? இயக்குனர் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments