விஜய் நடித்த 'தெறி' மற்றும் 'ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த அடுத்த படம் '60 வயது மாநிறம்'. பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, இந்துஜா உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படம் மட்டுமின்றி ராதாமோகன் இயக்கிய அனைத்து படங்களும் 'யூ' சான்றிதழ்தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
									
										
			        							
								
																	
	 
	மேலும் இந்த படம் 134 நிமிடங்கள் ஓடும் படம் என்றும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்