Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேண்டும் என்றால் தாணுவை சாகச் சொல்லுங்கள்; பிரபல இயக்குநர் பேச்சு

வேண்டும் என்றால் தாணுவை சாகச் சொல்லுங்கள்; பிரபல இயக்குநர் பேச்சு
, வியாழன், 30 நவம்பர் 2017 (14:02 IST)
சினிமா தயாரிப்பாளர் அசோக் குமார் மரணத்திற்கு காரணமாக கூறப்படும் அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசிய தாணுவை சாகச் சொல்லி இருக்கிறார்  இயக்குநர் அமீர். 


மதுரையைச் சேர்ந்த அசோக் குமார், நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமாரின் அத்தை மகன். சசிகுமாரின் கம்பெனி  புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தைக் கவனித்துவந்த இவர், நவம்பர் 21 ஆம் தேதியன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்புச்செழியன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மிரட்டியதால் வேறுவழியின்றி தற்கொலை செய்யும் முடிவிற்கு தள்ளப்பட்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இயக்குநர்கள் சசிகுமார்,  சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், அமீர் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்குத் தூண்டியதாக அன்புச்செழியன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.  இதனால் அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார்.
 
இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் தாணு அசோக் குமாரின் மரணம் வருத்தம் அளிப்பதாகவும், அனைவரும் கூறுவது போல் அன்புச்செழியன் கெட்டவர் இல்லை என்றும் அவரைப் போன்றவர்களை நம்பித் தான் சினிமா துறை இயங்கிக் கொண்டிருப்பதாக கூறினார். தான் சசிகுமாரை வைத்து படம் எடுத்து அதில் வரும் பணத்தை அசோக் குமாரின் குடும்பத்திற்கு கொடுக்க போவதாக கூறினார்.
 
இதற்கு கண்டனம் தெரிவித்த அமீர் வேண்டுமென்றால் தாணுவை சாகச் சொல்லுங்கள், நான் படம் எடுத்து அதில் வரும் பணத்தை அவர் குடும்பத்திற்கு தருகிறேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஞ்சனா 3 படத்தில் இருந்து ஓவியா திடீர் விலகல்