நடிகர் கிருஷ்ணாவைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைப்பு!

vinoth
புதன், 25 ஜூன் 2025 (14:09 IST)
போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்ரீகாந்த் கொக்கைன் எனும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவர விசாரணைத் தொடங்கியது.

கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் விசாரணையில் போதைப் பொருள் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வழக்கில் இன்னொரு நடிகரான கிருஷ்ணாவின் பெயரும் அடிபட்டது. நடிகர் கிருஷ்ணா இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரரும் கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்தவருமாவார்.

இந்நிலையில் அவரை விசாரிக்க போலீஸார் அவர் வீட்டுக்கு சம்மன் அளிக்க சென்ற போது அவர் வீட்டில் இல்லையாம். இதையடுத்து அவர் உடனடியாக நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர் ஆகவேண்டுமென வீட்டில் உள்ளவர்களிடம் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அவர் கேரளாவுக்குத் தப்பித்து ஓடியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது செல் ஃபோன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணாவைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments