இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் திரைப்படத்தில் 250 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	அட்லி இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
									
										
			        							
								
																	
	 
	இந்த நிலையில் இந்த ஸ்டென்ட் காட்சிக்காக மும்பையில் இருந்து 250 பெண் ஸ்டண்ட் கலைஞர்களை வரவழைத்து உள்ளதாகவும் அவர்களுடன் ஷாருக்கான் மோதும் காட்சியை பரபரப்பாக படமாக்கபப்ட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இதுவரை இந்திய சினிமாவில் இல்லாத வகையில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சியாக இந்த காட்சி இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது