ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள்!

vinoth
வியாழன், 20 ஜூன் 2024 (16:20 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் பாலிவுட்டில் அனிமல் நடித்தார். அடுத்து தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். புஷ்பா மற்றும அனிமல் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு அவரின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுள்ளது. இப்போது பாலிவுட் முன்னணி நடிகைகளுக்கு இணையான சம்பளத்தை அவர் பெற்று வருகிறார்.

வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அவர் நடிப்பில் புஷ்பா 2 மற்றும் சாவ்வா(இந்தி படம்)என இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளன. ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக இருந்த புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments