அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதனால் அஜித் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20 ஆம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு செல்ல உள்ள நிலையில் அஜித், திரிஷா மற்றும் ரெஜினா சம்மந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்க உள்ளார்களாம்.
இதற்காக படக்குழு அங்கு செல்ல உள்ள நிலையில் அஜித்துக்கும் இயக்குனர் மகிழ் திருமேனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சில நாட்கள் மட்டும் அங்கு படப்பிடிப்பை நடத்திவிட்டு ஆக்ஷன் காட்சியை சென்னையில் படமாக்கிக் கொள்ளலாம் என சொல்லிவிட்டாராம் அஜித். இதனால் அஜர்பைசானில் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடக்கும் என சொல்லப்படுகிறது.