Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது சல்மான் கான் & முருகதாஸ் இணையும் சிக்கந்தர் பட ஷூட்டிங்!

vinoth
வியாழன், 20 ஜூன் 2024 (16:15 IST)
தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்குக்கு ஒரு சிறிய இடைவேளை விட்டுவிட்டு இப்போது முருகதாஸ் சல்மான் கான் பட ஷூட்டிங்குக்கு சென்றுள்ளார். மும்பையில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நேற்று தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments