அமெரிக்கா நாட்டில் உள்ள நாடகத்திற்கு பெயர்பெற்ற பிராட்வே அரங்கில் பல நாடகங்களில் தோன்றி புகழ் பெற்றவர் சிறுமி லாரல் கிரிக்ஸ்.
நாடகத்தின் மூலமாக ஹாலிவுட் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார். பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்.
இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி லாரல் கிரிக்ஸுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
13 வயது சிறுமியின் இறப்பு ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.